கொரோனா வைரஸின் தாக்கத்தில் உலகெங்கும் இருக்கும் மக்கள் அந்த நோயின் வீரியத்தைக் குறைக்க தங்களைத் தனிமைப்படுத்தும் செயல்களில் இறங்கி வருகின்றனர். உலகெங்கும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இது போன்ற சூழலில் சில பிரபலங்கள் தாங்கள் தங்கள் செல்ல பிராணிகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இதைப் பார்த்த மருத்துவர்கள் “மனிதர்களுடன் மட்டுமின்றி விலங்குகளுடனும் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது.
ஏனென்றால் விலங்குகள் மூலமாக வைரஸ் மனிதனுக்குப் பரவாது என்றாலும் கூட.. மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு அது பரவ வாய்ப்புள்ளது. சீனாவில் மனிதரிடமிருந்து பூனைக்கும், பெல்ஜியத்தில் மனிதரிடம் இருந்து நாய்க்கும் இந்த வைரஸ் பரவியுள்ளதை மறந்துவிட வேண்டாம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.