சிறு வயதிலே உலகசாதனை படைத்துள்ளான் 8 வயது சிறுவனான ஹேம்தேவ். சென்னை வேளச்சேரி 4A-DAV public பள்ளியில் படித்து வரும் சிறுவன் ஹேம்தேவ் படிப்பைப் போலவே விளையாட்டிலும் படு சுட்டி. சிறுவயதிலே உடல் சார்ந்த பயிற்சியில் அதி தீவிரமாக இயங்கி வரும் ஹேம்தேவ் 22 நொடியில் நான்குகால் ஓட்டத்தில் 100 ஓடி உலகசாதனைப் படைத்துள்ளார். இச்சிறுவனை அமைச்சர் அன்பரசன் நேரில் பாராட்டி விருதை வழங்கியுள்ளார். ஹேம்தேவ் அடைந்த இந்த பெருமை மிகு புகழால் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் ஹேம்தேவ் பெற்றோரான சக்திவேல் தமிழ்செல்வி…
மேலும் ஹேம்தேவ் வேளச்சேரி பேருந்து நிலையம் அருகேயுள்ள வேதாஸ்ரீனி குங்பூ கிளாஸில் மாஸ்டர் வேதகிரி அவர்களிடம் தீவிரமாக குங்பூ கற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.