Tamil Movie Ads News and Videos Portal

SPB மரணம்! மீளாத்துயரைப் பகிர்ந்து கொள்ளும் பிரபலங்கள்

எங்கள் ‘பாடும் நிலவே’ நீ மண்ணை விட்டுப் பிரிந்தாலும் – எம்மை விட்டுப் பிரிவதில்லை- உன் காந்தக் குரல் உன்னைவிட்டுப் பிரிந்தாலும் -நீ பாடிய பாடலைவிட்டுப் பிரிவதில்லை. உன் மூச்சுக்காற்று உடல் விட்டுப் பிரிந்தாலும் -உன் குரல் கலந்த காற்றை விட்டுப் பிரிவதில்லை நீ உருவம் மறைந்து எங்களைப் பிரிந்தாலும் – உன் கானக் காற்று எங்களைத் தாலாட்டிக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு ரசிகனின் மூச்சிலும் உன் குரல் கலந்த காற்றையே சுவாசிக்க விட்டுவிட்டாய்.. நீ நிரந்தரமானவன் அழிவதில்லை.. பாடும் நிலவே ..கண்ணுறங்கு..தூரி..தூரி,.. ஆர்.வி.உதயகுமார்