தயாரிப்பு நிறுவனத்தின் இணையதளத்தை தொடங்கிய செளந்தர்யா ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான செளந்தர்யா ரஜினிகாந்த் தனது அப்பாவை வைத்து கோச்சடையான், தனது அக்காவின் கணவரான தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது பொன்னியின் செல்வன் படத்தை வெஃப் சீரிஸாக தயாரிக்கும் முயற்சியில் இருக்கிறார். இவர் தனது தந்தையின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதியில் தனது தயாரிப்பு நிறுவனமான MAYO ENTERTAINMENT நிறுவனத்தின் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் இந்த இணையதளத்தின் மூலமாக திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.