ஒரு சிறைக்கலவர வரலாற்றைப் பேசியுள்ளது சொர்க்கவாசல்
1999-ஆம் ஆண்டு மத்தியச்சிறையில் பெரும் கலவரம் நடைபெற்றது. அதில் சிறைக்கைதிகள் காவலர்கள் என பலர் கொல்லப்பட்டனர். அந்தக்கலவரத்தை மையமாக வைத்தே இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது
இந்தக் கலவரம் சார்ந்து விசாரணையை சிறைக்குள் துவங்குகிறார் நட்டி. அவருக்கு கருணாஸ் முதல் ஹீரோயின் வரை ஒவ்வொரு நபராக விளக்கம் சொல்கிறார்கள். அந்த விளக்குமும், இதற்குள் ஹீரோ ஆர்.ஜே பாலாஜி எப்படி உள்ளே வருகிறார் என்பதும், அவரின் என்ட்ரி& எக்ஸிட் என்ன என்பதுமே படத்தின் திரைக்கதை
ஆர்.ஜே பாலாஜி சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். சிறிதளவும் பிசிறு தட்டாமல் அவர் சீரியஸ் முகம் காட்டியிருப்பது ஆச்சர்யப்பட வைக்கிறது. அவரைத் தொடர்ந்து பல ஹீரோக்கள் படத்தில். அவர்களில் முக்கியமானவர்கள் கருணாஸும், செல்வராகவனும். மிரட்டியுள்ளனர். பாலாஜி சக்திவேல் நட்டி உள்பட படத்தில் இன்னும் நிறைய கேரக்டர்ஸ். அனைவருமே நன்றாக ஸ்கோர் செய்துள்ளனர்.
படத்தின் உணர்வை அழகாக எடுத்துச் சொல்லும் அளவில் பின்னணி இசை அமைந்துள்ளது. அனிருத் குரலில் வரும் ஒரு ஆங்கிலப்பாடலும் தரம். சிறைக்குள்ளே நடக்கும் கதையில் , சிறிதும் அலப்பு ஏற்படாத வண்ணம் ஒளிப்பதிவாளர் ப்ரேம்களை மாற்றி மாற்றி அசத்தியுள்ளார்.
ஒரு வரலாற்றைக் கதையாக்கும் போது,அவை வெறும் தகவல்களாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. வரலாற்றை திரைக்கதையாக மாற்றுவது பெரும் சிரமம். அதை சிரமேற்கொண்டு சிறப்பாக கையாண்டுள்ளது இயக்குநரின் எழுத்துக்கூட்டணி. ஆர்.ஜே பாலாஜி கேரக்டர் மீது இன்னமும் அனுதாபம் கூடும்படி அவர் கேரக்டரை அமைத்திருக்கலாம். படத்தோடு முழுமையாக ஒன்ற முடியாமல் போனதிற்கு அதுவொரு காரணம்
சொர்க்கவாசல்- அர்த்தமுள்ள முயற்சி
3/5
-வெண்பா தமிழ்