Tamil Movie Ads News and Videos Portal

சூரகன்- விமர்சனம்

சூரகன் வீரனா..சூரனா?

நாயகன் கார்த்திகேயன் விநாயகம் பணியிடை நீக்கம்பெற்ற காவல் அதிகாரி. அவர் சாலையில் ஆக்சிடெண்ட் ஆகி கிடக்கும் ஒரு பெண்ணை காப்பாற்ற முயன்று தோற்கிறார். இறந்துபோன அந்தப் பெண்ணின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் மர்மங்களை அவர் கண்டுபிடிப்பதே படத்தின் கதை

அறிமுக நாயகன் ஆக்சன் காட்சிகளில் அசத்துகிறார். ஏனைய காட்சிகளில் இன்னும் ஸ்கோர் செய்திருக்கலாம். நாயகி கேரக்டரின் வடிவம் புதிதாக அமைக்கப்படவில்லை. வழக்கமான ஹீரோயினாகவே வந்து போகிறார். இவர்கள் தவிர்த்து படத்தில் தோன்றும் எல்லா ஆக்டர்ஸும் கொடுத்த வேலையைச் செய்துள்ளனர்.

பின்னணி இசையில் பெரியளவில் வீரியம் இல்லை. ஒளிப்பதிவில் ஓரளவு கவனம் பெறுகிறார் ஒளிப்பதிவாளர். எடிட்டிங் வொர்க் இன்னும் திருப்திகரமாக அமைந்திருக்கலாம்

ஒரு ஆவ்ரேஜ் படமாக மாறுவதற்கான எல்லா வாய்ப்பும் கதையில் இருந்தும், சீரான திரைக்கதை அமைக்கத் தவறியுள்ளார் இயக்குநர். சூரகனை இன்னும் கூர் தீட்டி கொண்டு வந்திருந்தால் பெரியளவில் பேர் சேர்த்திருப்பான்
2/5
-மு.ஜெகன் கவிராஜ்