Tamil Movie Ads News and Videos Portal

”மகன் யாஷிகாவுடன் காதலில் இல்லை” – நடிகர் விளக்கம்

‘துருவங்கள் பதினாறு’ உட்பட பல்வேறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் யாஷிகா ஆனந்த நடித்திருந்தாலும் கூட, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்திற்குப் பின்னர் தான் அவர் பரவலாக ரசிகர்களிடம் சென்று சேர்ந்தார். அவ்வபோது கவர்ச்சிப்படங்களை சோஷியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்து வரும் யாஷிகா பிரபல நடிகரான தம்பி இராமையாவின் மகன் உமாபதியுடன் நெருக்கமாக இருக்கும் சில படங்கள் இணையத்தில் சமீபகாலமாக உலா வருகின்றன.

இருவரும் காதலில் இருக்கிறார்களோ என்கின்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், நடிகர் தம்பி இராமையா, “அதாகப்பட்டது மகா ஜனங்களே மற்றும் திருமணம் என இரு படங்களில் என் மகன் ஏற்கனவே நாயகனாக நடித்திருக்கிறான். அவன் தற்போது எனது இயக்கத்தில் “சிறுத்தை சிவா” படத்தில் நாயகனாக நடித்து வருகிறான். இதில் யாஷிகா ஆனந்த நாயகியாக நடித்திருக்கிறார். பாடல் காட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது. மற்றபடி இருவருக்கும் இடையில் காதல் எல்லாம் இல்லை. எனது மகனுக்கு மலேசியாவில் திருமணத்திற்கு பெண் பார்த்து வருகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.