Tamil Movie Ads News and Videos Portal

சங்கத்தமிழன் படம் வெளி வராததிற்கு இதுதான் காரணமா?

- Advertisement -

சங்கத்தமிழன் படம் உறுதியாக வந்துவிடும் போஸ்டரை ஓட்டுமாறு
திரையரங்குகளுக்கு
தகவல் தெரிவிக்கப்பட்டது

சென்னை நகரம் செங்கல்பட்டு ஏரியாவில்வீரம் படம் திரையிடப்பட்ட வகையில்
தேனாண்டாள் முரளி அவர்களுக்கு விஜயா வாஹினி திருப்பித் தர வேண்டிய சுமார்
ஒரு கோடி ரூபாய் கொடுப்பதில் சமரச முடிவு எட்டப்படவில்லை

இதே போன்றுபிற ஏரியாவிநியோகஸ்தர்களுக்கு கொடுக்கவேண்டியபாக்கித் தொகையை கொடுப்பதற்கு
லிப்ரா ரவியும் விஜயா வாகினி நிறுவனமும் ஒப்புக்கொண்டது

சென்னை நகரம் செங்கல்பட்டு ஏரியாவீரம் படம் விநியோகஸ்தர் கேட்கும் தொகையை தர இயலாது என்று தயாரிப்பு நிறுவனம் கூறியதால் சங்கத்தமிழன் திட்டமிட்டபடி இன்று வெளியிடப்படுவது தடைபட்டுள்ளது

தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட
சங்கத்தமிழன் படம்சம்பந்தமான பிரச்சனைகளை பேசி தீர்ப்பதற்கு கால அவகாசம்இருந்தும் படத்தைத் தயாரித்த விஜயா வாகினிமற்றும் தமிழ்நாடு உரிமையை வாங்கிய லிப்ராஆகிய
இருவரும் உரிய காலத்தில் முயற்சி எடுத்து பேச்சுவார்த்தை நடத்திஇருந்தால் இன்று
சங்க தமிழன் வெளியாகியிருக்கும்
தயாரிப்பு நிறுவனத்திலும் வினியோக நிறுவனத்திலும் தொழில் தெரியாதபிரச்சனைகளை எப்படி அணுகுவது என்பது பற்றிய அனுபவம் இல்லாதவர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்ததன் விளைவு சங்கத்தமிழன் படம் சங்கடத்தை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது
தமிழ்சினிமாவில் தயாரிப்பாளர்கள் சங்கம் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாததன் காரணத்தால் முடங்கிப்போயிருப்பதும் ஒரு காரணம் என்கின்றனர் திரைத்துறையினர்

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.