ஓ மை கடவுளே படம் காதலர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் படம் குறித்து நடிகை ரித்திகா சிங் பகிர்ந்து கொண்டதாவது…
“ஓ மை கடவுளே” என் வாழ்வில் ஸ்பெஷலான படம். 3 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன். மனதிற்கு பிடித்த நல்ல கதாப்பத்திரங்கள் மட்டுமே செய்வது என்கிற முடிவில் இருந்தேன். இந்தப்படத்தின் கதை கேட்டபோது இது எனக்கு கிடைத்த தங்கவாய்ப்பாக தோன்றியது. இக்கதையில் முதலில் என்னை ஈர்த்த விசயம், நாயகி ஒரு கிறிஸ்த்துவ மணப்பெண்ணாக வருவது தான். என் நெடுநாளைய சிறு வயது கனவு அது. மேலும் படத்தின் திரைக்கதை அற்புதமாக இருந்தது. படம் முழுக்க நீங்கள் புன்னகை தவழும் முகத்துடன் இருப்பீர்கள். அசோக் செல்வன் மிகத்திறமை வாய்ந்த நடிகர் இப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் குவியும். வாணி போஜன் ஒரு அற்புதமான நடிகை. அவரை சுற்றி இருப்பவர்களிடம் எப்பொதும் புன்னகை தவழும். நேர்மறை தன்மை மிக்க பண்பாளர். இப்படம் மூலம் அவர் என் சகோதாரியாக மிக நெருக்கமான உறவாகிவிட்டார். “ஓ மை கடவுளே” வெறும் ரொமான்ஸ் படம் மட்டுமே இல்லை. உறவுகளின் வலிமையை, நட்பின் பெருமையை பேசும் படமாக இப்படம் இருக்கும். டிரெய்லரில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் படத்தில் பெரும் பங்கு வகிக்கும். இப்படம் உங்கள் மனதில் பல காலம் நீங்காது நிற்கும் என்றார்.