Tamil Movie Ads News and Videos Portal

ரம்யா நம்பீசன் வெளியிட்ட மண்டை ஓடு புகைப்படம்

நடிகை ரம்யா நம்பீசன் நடித்தோம் சம்பாதித்தோம் என்று மட்டம் இல்லாமல் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை கவனித்து அது குறித்த தன் கருத்துக்களை வெளியிடுவதோடு, பெண்களின் பாதுகாப்பிற்காகவும் பிரத்யேகமாகவும் அமைப்பினரோடு சேர்ந்து செயல்படுபவர். சமீபத்தில் கூட பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறை குறித்தும் கூட ஒரு குறும்படம் ஒன்றை இயக்கி இருந்தார்.

தற்போது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வரும் நிலையில் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு புகைப்படம் வைரல் ஆகியிருக்கிறது. இப்படத்தில் பல மண்டை ஓடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு மண்டை ஓட்டிற்கு கீழும் இந்து, முஸ்லீம், கிறிஸ்டின், புத்தம், யூதர், சமணர், பெளத்தர், ஆண், பெண், ஹோமோ, ஹெட்டிரோ, வொய்ட், ப்ளாக், நீ, நான் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதற்கு கீழே ”அடிப்படையில் நாம் மனிதர்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படம் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.