இயக்குநராக இருந்து, தற்போது நாயகனாக ஏற்றம் கண்டு வரும் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கு “பொம்மை” என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ‘மொழி’ ‘அபியும் நானும்’ ‘பயணம்’ போன்ற படங்களை இயக்கிய ராதாமோகன் இப்படத்தை இயக்கவிருக்கிறார். ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடி சேருகிறார் ப்ரியா பவானி சங்கர். இப்படத்தின்
பர்ஸ்ட்லுக் போஸ்டரும் நேற்று வெளியிடப்பட்டது. அதில் ஒரு பொம்மையுடன் கை கோர்த்தபடி எஸ்.ஜே.சூர்யா நிற்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏஞ்சல்ஸ் ஸ்டூடியோஸ் சார்பாக வி.மருதமுத்து பாண்டியன், ஜாஸ்மின் சந்தோஷ், தீபா துரை ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது.