அமானுஷ்யங்களை அடிப்படையாக கொண்ட படங்களில் நல்ல ஐடியாக்களை புகுத்தினால் அப்படங்கள் வொர்க்கவுட் ஆகிவிடும். அந்த வகையில் சிவி-2 பார்டர் தாண்டியிருக்கிறது
சிவி சீக்குவல் 1-ல் பேய் செய்தகொலைகளையும் அமானுஷ்யங்களையும் யூட்யூபில் பதிவேற்றத் துடிக்கும் மாணவர்களை சிவி-2 பேய் என்ன செய்கிறது என்பதே படத்தின் கதை.இப்படத்தின் முதல் பலம் நடிகர்களின் பெர்பாமன்ஸ். தேஜ் சரண்ராஜ் மாணவர்களை சீட்டிங் செய்து நன்றாக நடித்துள்ளார். நடிகர் சாம்ஸ் மிக நன்றாக ஸ்கோர் செய்துள்ளார். மாணவர்களாக வரும் அனைவருமே எதார்த்தமாக நடித்துள்ளார்கள்
பி.எல். சஞ்சயின் ஒளிப்பதிவு துல்லியம். திகில் காட்சிகளை அருமையாக எடுத்துள்ளார். இயக்குநர் கே.ஆர் செந்தில் நாதன் தனித்துவமாக வேலை செய்து படத்தை இயக்கியுள்ளார். சிறப்பான ஐடியாக்கள் இன்னும் பலமாக பொருந்தி வந்திருக்கலாம் என்றாலும் சிவி-2 படம் பார்க்கும் நம்மை துளியும் சோர்வடைய வைக்கவில்லை என்பதே நிஜம்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்