அதிதிபாலன் நடிப்பில் வெளியான “அருவி” திரைப்படம் பரவலான பாராட்டுக்களைப் பெற்ற போதிலும், அதை இயக்கிய இயக்குநர் ‘அருண் புருஷோத்தமனுக்கு அடுத்த வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. இறுதியாக சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடெக்ஷன்ஸ் சார்பில் படம் இயக்கும் வாய்ப்பை சிவகார்த்திகேயன் அளித்தார். பிரதீப் ஆண்டனி பானு, ஆரவ் பட் நம்பி, டியா தயால் போன்ற புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 75 நாட்களில் முடிவடைந்திருக்கிறது.
”வாழ்” எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தின் காட்சிகள் பெரும்பாலும் தமிழ்நாடு, கேரளா மற்றும் இந்தோனேஷியா காடுகளின் அடர்ந்த வனப்பகுதிகளில் படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் 1930 காலகட்டக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றை பிலிமில் படமாக்கி இருக்கிறார்கள். படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 3வது படம் இதுவாகும்.