Tamil Movie Ads News and Videos Portal

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்- விமர்சனம்

முரட்டு சிங்கிள் வாழ்வில் ஓர் செயற்கை பெண் போன் நுழைந்தால் என்னவாகும்? என்பதே படத்தின் கதை

டெலிவரி பாய் சிவா கையில் சிக்குகிறது ஒரு போன். அந்தப்போன் சிங்கிள்ஸ்களின் ஏக்கம் தீர்க்கும் முக்கிய உயிரி. அதைக் கண்டுபிடித்தவர் பகவதி பெருமாள். அவரிடம் இருந்து போனை திருடர்கள் லவட்ட, ரணகள கதைக்களத்தோடு துவங்கும் படம் எதை நோக்கி நகர்ந்து முடிகிறது என்பதை ஓரளவு சுவாரஸ்யம் குறையாமல் சொல்லியுள்ளார் இயக்குநர்

சிவா இடதுகையால் டீல் செய்யும் அளவிலான கேரக்டர் என்பதால் புகுந்து விளையாண்டுள்ளார். அவர் அடிக்கும் சிற்சில பன்ச்கள் எல்லாம் அதிரிபுதிரி ரகம்..அவருக்கு அடுத்து படத்தில் ஸ்கோர் செய்வது மனோ. சின்னச் சின்ன வசனங்களிலும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். இவர்கள் போக படத்தில் தோன்றும் மற்றும் பலரும் சற்றும் குறைவில்லாமல் நடித்துள்ளனர்

படத்தின் தரத்தைப் பாதிக்காத அளவில் பின்னணி இசையும் பாடல்களும் அமைந்துள்ளன. அதேபோல் ஒளிப்பதிவாளரும் தனது வேலையை குறைவின்றி செய்திருக்கிறார்.

ஓரளவு ஓகேவான லைன். சிங்கிள் ஷாட்ஸில் கூட பன்ச் அடித்து அசத்தும் நடிகர்கள்..So ஒரு மினிமம் கியாரண்டி படம் இது என பிக்ஸ் பண்ணி ஸ்கிரிப்டில் வேலை செய்துள்ளார் இயக்குநர். அது படத்தின் திரைக்கதை ஓட்டத்தில் நன்றாகவே தெரிகிறது. இன்னும் சிலபல லாஜிக் ஓட்டைகளைச் சரிசெய்திருந்தால் படம் இன்னுமே ஈர்த்திருக்கும். இருப்பினும் ஈர்ப்புக்கு குறைவில்லை. ஒருமுறை நிச்சயம் சாட் செய்யும் தரத்தில் தான் அமைந்துள்ளது இந்த ஸ்மார்ட் போன் கதை
3/5
-மு.ஜெகன் கவிராஜ்