ஈழம் சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் ஒரு காத்திரமான படைப்பாக இதுவரை மாறவில்லையே என்ற ஏக்கத்தை சினம்கொள் திரைப்படம் தீர்த்திருக்கிறது.
டெக்னிக்கலாகவும் கதையாகவும் மிகவும் மெச்சத்தகுந்த ஒரு படமாக சினம்கொள் உருவெடுத்திருக்கிறது.
போருக்குப் பின்னான சூழலை மிக எதார்த்தமாக காட்டுகிறது படம். போராளியாக ஜெயலில் இருந்து வெளிவந்திருக்கும் நாயகன் காணாமல் போன தன் மனைவியைத் தேடுகிறார். அவரோடு தன் கணவனைத் தேடி ஒரு பெண்போராளியும் இணைகிறார். இவர்களின் தேடலுக்கு ஒரு பிரச்சனை தடையாக வர, அந்தத்தடையை எப்படிக் கடந்தனர் என்பதே படத்தின் கதை
விசித்திரங்களும் வேதனைகளும் நிறைந்த ஈழமண்ணில் நடக்கும் பல விசயங்களை, பலவிதமான அச்சுறுத்தல்களை, கலப்படம் மிகுந்த அரசியலை நேர்த்தியாக பதிவுசெய்துள்ளார் இயக்குநர் ரஞ்சித் ஜோசப்.
அமுதன் கேரக்டரில் நடித்துள்ள நாயகன் ஒரு துயர வாழ்வின் பயணத்தை கண்முன் வைத்துள்ளார். மிகச்சிறப்பான நடிப்பு. அவரைப்போலவே படத்தில் தோன்றும் அனைத்துக் கேரக்டர்களும் அட்டகாசமாக நடித்திருக்கிறார்கள்.
நடிகர்களின் நடிப்பை போலவே ஜீவனுள்ள உழைப்பை கொடுத்துள்ளார்கள் படத்தின் டெக்னியஷின்கள். ஒளிப்பதிவாளர் இசை அமைப்பாளர் அனைவருக்கும் ஓர் தமிழ் வணக்கம்
குறைகாண முடியாத நிறை மிகுந்த படைப்பான சினம்கொள் நாம் கொண்டாட வேண்டிய படம்
-மு.ஜெகன் கவிராஜ்