Tamil Movie Ads News and Videos Portal

சினம்- விமர்சனம்

தவறுகளை அரசே தட்டிக்கேட்க வேண்டும் என்பதில்லை என்ற கருத்தை சினத்தோடுச் சொல்கிறது சினம்

நேர்மையான சப் இன்ஸ்பெக்டர் அருண்விஜய். அவருக்கு நேர்மாறான இன்ஸ்பெக்டர் ஒருவரால் சில இன்னல்கள் அருண்விஜய்க்கு ஏற்படுகிறது. இந்நிலையில் அருண்விஜய் மனைவிக்கு ஓர் அசம்பாவிதம் நடக்கிறது. அதற்கு காரணமானவர்களை அருண் விஜய் எப்படி பழி தீர்க்கிறார் என்பதே படத்தின் கதை

வழக்கம் போல் அருண்விஜய் அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார். உடல் அமைப்பு படியும் எமோஷ்னல் வழியாகவும் அசத்துகிறார். அருண் விஜய் தவிர்த்து எல்லாருமே ஓரளவு கவனம் ஈர்க்கிறார்கள்.

பின்னணி இசை பாடல்கள் இரண்டுமே கதையை டிஸ்டர்ப் செய்யவில்லை. படத்தின் தன்மையை உணர்ந்து கேமராமேன் தன் ஒளிப்பதிவை அமைத்துள்ளார். எடிட்டரின் ஷார்ப்னெஸும் கவனிக்க வைக்கிறது

கதையை புதுமையாக நகர்த்த இயக்குநர் மெனக்கெட்டிருப்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. வெல்டன். இன்னும் போதுமான டெப்த்தை பின்பாதியில் சேர்த்திருக்கலாம். மேலும் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் நீதி நிச்சயமாக இன்றைய நடைமுறைக்கு பொருந்துவதாக இருப்பதால் சினத்தை நாம் மனம் உவந்து வரவேற்கலாம்
3/5
மு.ஜெகன் கவிராஜ்

#sinam #சினம்