Tamil Movie Ads News and Videos Portal

மகனுக்காக அப்பா செய்த அர்ப்பணிப்பு-சாந்தனு!

Movie Slides Pvt. Ltd சார்பில் R. விஜயகுமார் தயாரிப்பில், இயக்குநர் GNR குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய், பாலக் லால்வானி, நடித்துள்ள திரில்லர் டிராமா திரைப்படம் “சினம்”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை விழா நேற்று கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் திரைப்பிரபலஙகளும் படத்தின் குழுவினரும் கலந்துகொண்டனர்.

இவ்விழாவினில் நடிகர் சாந்தனு கூறியதாவது..,

“அருண் விஜய் உடைய பயணம் என்னை எப்போதும் ஊக்கப்படுத்துகிற ஒன்று. தன்னுடைய திறமையையும், அதையும் தாண்டி கடின உழைப்பை கொடுத்து தனக்கென தனிப்பாதையை உருவாக்கியுள்ளார். அது திரைத்துறையில் எளிதானதல்ல. விஜயகுமார் சார் தன்னுடைய மகனுக்காக பெரிய அர்ப்பணிப்பை கொடுத்துள்ளார். அவருக்கு தொடர்ந்து வெற்றிகள் குவிய வேண்டும். படத்தின் டிரைலர் சிறப்பாக இருக்கிறது. படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள், இந்த படம் செப்டம்பர் 16 வெளியாக இருக்கிறது, இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

#Sinam #சினம்