நடிகர் சிம்பு திருமணம் குறித்த செய்திகள் வட்டமடிப்பதைத் தொடர்ந்து சிம்புவின் பெற்றோர் டி ராஜேந்தர், உஷா ராஜேந்தத் இருவரும் ஒரு விளக்கம் கொடுத்துள்ளனர்.
“அனைவருக்கும் வணக்கம்.
எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.
எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்”
நன்றி.
இப்படிக்கு,
டி.ராஜேந்தர் M.A
உஷா ராஜேந்தர்