Tamil Movie Ads News and Videos Portal

சிம்பு ஆர்யா, வில்லத்தனம் செய்வது யார்…?

ஆர்யா நீண்ட நாட்களாகவே நிலையான வெற்றிக்கு போராடிக் கொண்டிருப்பவர். அவரால் ‘மதராசப்பட்டிணம்’, ‘நான் கடவுள்’ போன்ற ஒரு வெற்றியை நீண்ட காலமாக கொடுக்க முடியவில்லை. அதனால் இரண்டு நாயகர்களில் ஒருவராகவும் பல நேரங்களில் கெஸ்ட் ரோலில் கூட நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை சாயிஷாவை காதல் திருமணம் செய்ததற்கு பின்னர், படங்களில் அதிக கவனம் செலுத்து வருகிறார்.

தற்போது ‘மாநாடு’ படத்தின் நாயகனாக நடித்து வரும் சிம்புவோடு, ஒரு படத்தில் ஆர்யா இணைய இருக்கிறார். இப்படத்தை ஞானவேல் ராஜா ஸ்டூடியோ க்ரீன் சார்பாக தயாரிக்க, ‘அரிமா நம்பி’ ‘இருமுகன்’, ‘நோட்டா’ ஆகியப் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்க இருக்கிறார். இது இரண்டு ஹீரோக்கள் தொடர்பான படமா..? இல்லை இருவரில் ஒருவர் வில்லனாக நடிக்கவிருக்கிறார்களா..? என்கின்ற தகவல் உறுதியாகத் தெரியவில்லை.