Tamil Movie Ads News and Videos Portal

விமர்சனங்கள் பெரிதா? வெற்றி பெரிதா?

சமீபத்தில் கெளதம் வாசுதேவ் மேனென் இயக்கத்தில் சிம்பு திரிஷா இருவரும் “விண்ணைத்தாண்டி வருவாயா2” படத்திற்கான லீட் போல் “கார்த்தி டயல் செய்த எண்” என்ற குறும்படத்தில் நடித்திருந்தனர். அக்குறும்படம் இணையத்தில் வெளியான சிலமணி நேரங்களிலே வீவ்ஸ் எகிறியது. சிம்பு திரிஷா இருவரும் போனில் பேசிக்கொள்ளும் காட்சியை வைத்து மட்டுமே படத்தை எடுத்திருந்தார் கெளதம் மேனென்.

 

திரிஷா இன்னொருவரின் மனைவி என்று தெரிந்த பின்பும் சிம்பு அவரிடம் ஐ லவ் யூ என்று சொல்லும் வசனத்திற்கு இணையமெங்கும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதேநேரம் படத்திற்கு பாசிட்டிவ் ரிவீஸும் வந்த வண்ணம் இருக்கின்றன. அதனால் படக்குழு விமர்சனத்தை விட வியாபாரம் பெரிது என்று சைலண்ட் மோடில் ஹேப்பியாக இருக்கிறார்களாம்