சமீபத்தில் வெளியாகி வெகுவான பாராட்டுக்களை அள்ளிய திரைப்படம் “சில்லுக் கருப்பட்டி”. இப்படத்தை ஹலீஷா சமீம் என்கின்ற இயக்குநர் இயக்கி இருந்தார். இதற்கு முன்னர் இவர் ‘பூவரசம் பீப்பீ’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சில்லுக் கருப்பட்டி படத்தைப் பார்த்து நெகிழ்ந்து போன சூர்யா அப்படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான 2 D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் ரீலீஷ் செய்தார். தற்போது ஹலீதா தனது அடுத்த படத்தையும் இயக்கி முடித்துவிட்டார்.
“ஏலே” என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கும் இப்படம் தந்தை மகன் இருவருக்குமிடையேயான உறவுநிலையைப் பற்றி பேச இருக்கிறது. ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் குறித்துப் பேசிய ஹலீதா சமீம், “எப்படி சில்லுக் கருப்பட்டி காதல் கதையாக இருந்தாலும் அதிலும் ஒரு வித்தியாசத்தைக் காட்டியதோ, அதே போல் இப்படமும் தந்தை மகன் உறவைப் பற்றிய படமாக இருந்தாலும் அதிலும் ஒரு வித்தியாசத்தைக் கொண்டிருக்கும். இப்படத்தின் பேசு பொருள் யுனிவர்சல் கான்செப்ட் ஆக இருப்பதால் இதனை முதலில் திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப இருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.