அமைச்சரின் பேச்சுக்கு சித்தார்த் பதிலடி
தமிழ்த்திரையுலகில் சில நடிகர்கள் தான் படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி சமூகம் சார்ந்த பிரச்சனைகளிலும் துணிச்சலாக கருத்து தெரிவிப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு சில நடிகர்களில் சித்தார்த்தும் ஒருவர். அவர் சமீபத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்ததைக் கண்டித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இது குறித்து பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “சித்தார்த்தா..? யார் அவர்..? அவர் எந்தப் படத்தில் நடித்திருக்கிறார்..? விளம்பரத்திற்காகப் பேசும் அவரைப் போன்றவர்களை வளர்த்துவிட விரும்பவில்லை.” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சித்தார்த் மீண்டும் தனது டிவிட்டர் பக்கத்தில், “2014ம் ஆண்டு எனக்கு சிறந்த நடிகருக்கான விருதை உங்களது அரசு தான் வழங்கியது. 2017ம் ஆண்டும் விருது தருவதாக கூறிவிட்டு இன்று வரை அந்த விருதை தரவில்லை. விளம்பரத்திற்காகப் பேசுபவன் நான் இல்லை. எனது சொந்த முயற்சியில் முன்னேறி இருக்கிறேன். தேசத்துக்கு வரி செலுத்தும் ஒரு குடிமகனை இப்படி அவமதிப்பது முறையல்ல..” என்று அமைச்சரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் சித்தார்த்.