Tamil Movie Ads News and Videos Portal

விமானநிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரேயா

திருமணத்திற்குப் பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த நடிகை ஸ்ரேயா தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அவர் நடிப்பில் உருவான நரகாசுரன் திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. தற்போது இயக்குநர் மாதேஷ் இயக்கத்தில் விமல் ஜோடியாக சண்டைக்காரி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் லண்டன் ஏர்ப்போட்டில் நடைபெற்றது. அப்பொழுது பேசியபடியே ஸ்ரேயா கவனக்குறைவால் குடியுரிமைப் பகுதி வளையத்திற்குள் சென்றுவிட்டார். உடனே அவரை துப்பாக்கி ஏந்திய போலீஸார் சுற்றி வளைத்ததோடு கேள்விக்கணையால் துளைத்தெடுக்கத் தொடங்கிவிட்டனர். பின்னர் படப்பிடிப்புக் குழுவினர் அவரின் அனுமதிச்சீட்டு மற்றும் படப்பிடிப்பு நடத்துவது தொடர்பான உரிமம் போன்றவற்றைக் காட்டி, அவரை மீட்டிருக்கின்றனர். இதனால் லண்டன் ஏர்போட்டில் சில நிமிடங்களுக்குப் பரபரப்பு நிலவியது.