Tamil Movie Ads News and Videos Portal

கவனம் பெறும் குறும்படம்

சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த சினிமாக்காரர்களை கொரோனா முடக்கியுள்ள நிலையில் சத்தமில்லாமல் ஐந்து நிமிடம் ஓடக்கூடிய ஒரு குறும்படத்தை ‘செல்ஃபி’ முறையில் எடுத்துள்ளார் நடிகர் ஆதேஷ் பாலா.

பழம்பெரும் நடிகர் ‘ஐசலக்கா’ சிவராமனின் வாரிசான இவர் ‘முண்டாசுப்பட்டி’, ‘சவரக்கத்தி’, ‘மரகதநாணயம்’, ‘மம்பட்டியான்’, ‘பேட்ட’ போன்ற படங்களில் திறமைகாட்டியவர்.

குறும்பட அனுபவத்தைப்பற்றி ஆதேஷ் பாலாவிடம் கேட்டோம். ‘‘இது குறும்பட சினிமாவிலேயே முதல் முயற்சி என்று சொல்லலாம். சிங்கிள் ஷாட்டாக ‘செல்ஃபி’ முறையில் எடுத்ததுதான் இந்த குறும்படத்தின் ஹைலைட். வாழ்க்கையில் எது நடந்தாலும் சோர்ந்துபோகாமல் எதிர்நீச்சல் போட்டு ஜெயிக்க வேண்டும் என்பதை இதில் அழுத்தமாகச் சொல்லியுள்ளேன்.

படத்தோட பெயர் ‘ஒன்வே’. இந்த குறும்படத்துக்கு இசை, எடிட்டிங் என்று தொழில்நுட்ப விஷயங்கள் அனைத்தையும் நானே என்னுடைய செல்போனிலேயே பண்ணினேன். என்னுடைய இந்த முயற்சிக்கு கோலிவுட்டிலிருந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. என்னுடைய இந்த முயற்சியை தியாகராஜன் சார் வெகுவாகப் பாராட்டினார்.

இந்த குறும்படம் எடுக்க நண்பர்கள் மதிகிருஷ்ணா, முருகன், ராபர்ட் ஆகியோர் உதவியாக இருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்’’ என்று சொல்லும் ஆதேஷ் பாலா தற்போது அரவிந்தசாமியுடன் கள்ளப்பார்ட், சி.வி.குமார் சாரின் ‘ஜாங்கோ’, ‘மாநகர எல்லை’ உட்பட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

வரும் 20ம் தேதி இந்த குறும்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகவுள்ளது.