Tamil Movie Ads News and Videos Portal

பத்திரிகையாளர் கோடங்கியின் புதிய அவதாரம்

பத்திரிகையாளர் கோடங்கியின் குறும்பட டைட்டில், பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினத்தில் ரிலீசாகும்!பத்திரிகை நண்பர்கள் நலம் விரும்பிகள் அனைவருக்கும் வணக்கம்.நீண்ட காலமாக உங்களில் ஒருவனாக பயணித்த நான் (கோடங்கி ஆபிரகாம்) இப்போது அடுத்த நகர்வாக உருவாக்கியுள்ள குறும்படம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

‘ருச்சி சினிமாஸ்’ & ‘பாஸ்ட் மெஸெஞ்சர்’ இணைந்து வழங்கும் பெயரிடப்படாத “Short Film No. 1” குறும்பட பர்ஸ்ட் லுக், டைட்டில் புத்தாண்டு அன்று வெளியாகிறது.சமூகம் என்ற சுழலில் சிக்கி அவலமான தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண் அந்த சமூகத்தை எப்படி எதிர் கொள்கிறார் என்பதே குறும்பட கதை.