Tamil Movie Ads News and Videos Portal

ஒரே இடத்தில் ரஜினி மற்றும் அஜீத் படத்தின் படப்பிடிப்பு

- Advertisement -

’வீரம்’ ‘விஸ்வாசம்’ ‘விவேகம்’ ‘வேதாளம்’ ஆகியப் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ப்லிம் சிட்டியில் நடைபெறவிருக்கிறது. இந்த படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ் முதலானோ கலந்து கொள்ளவிருக்கின்றனர். அது போல் தமிழ் சினிமாவின் மற்றொரு உச்ச நட்சட்த்திரமான தல நடிகர் அஜீத்குமார் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் “வலிமை” படத்தின் படப்பிடிப்பும் கடந்த 12ம் தேதி முதல் ராமோஜிராவ் ப்லிம் சிட்டியில் தான் நடைபெற்று வருகிறது. தற்போது சண்டைக்காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். முதலில் டிசம்பர் இறுதியில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென்று இப்படத்தின் படப்பிடிப்பை 13ம் தேதியே படக்குழு தொடங்கிவிட்டது. ரஜினி மற்றும் அஜீத் இருவரின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடப்பதால், படப்பிடிப்புத் தளத்தில் இருவரும் சந்தித்து பேசிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.