Tamil Movie Ads News and Videos Portal

சிபிராஜ்-க்கு கட்டளையிடும் மது ஷாலினி

- Advertisement -

அறிமுக இயக்குநர் தரணிதரன் இயக்கத்தில் தற்போது சிபிராஜ் நடித்து வரும் படம் “ரேஞ்சர்”. இப்படத்தில் சிபிராஜ் பாரெஸ்ட் ரேஞ்ச்ர் அதாவது காட்டிலாகா அதிகாரியாக நடித்திருக்கிறார். இப்படத்தில் சிபிராஜ்க்கு உயர் அதிகாரியாக அவன் இவன் படத்தில் நடித்த மது ஷாலினி நடிக்கவிருக்கிறார்.

பழனியப்பா கல்லூரி, 16 ஆகிய படங்களில் அவர் நடித்திருந்த போதும் ‘அவன் இவன்’ படம் தான் அவரை வெளியுலகிற்கு அடையாளம் காட்டியது. பின்னர் சில காலம் தெலுங்கில் நடித்து வந்த மது ஷாலினி தற்போது மீண்டும் தமிழில் நடிக்கிறார். இப்படத்தில் சிபிராஜ் ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மனிதர்களைத் தாக்கிக் கொல்லும் ஒரு புலியை எப்படி பிடிக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.