ஒரு நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் ரிலீஸானால் அது தயாரிப்பாளர்களுக்கு சிக்கலை ஏற்ப்படுத்தும். இதைப்.புரிந்துகொண்டு இரு படங்களின் தயாரிப்பாளர்களும் பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். அந்த வகையில் டகால்டி நாளை (31.01.2020) வெளியாகும் என்றும் சர்வர் சுந்தரம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது சமபந்தமாக இரு தயாரிப்பாளர்களும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து இந்த தகவலை உறுதிப்படுத்தினார்கள் சந்தித்தனர்.
இச்சந்திப்பில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பாரதி ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பெப்சி சிவா, தயாரிப்பாளர் ராஜன் “சர்வர் சுந்தரம்” படத்தயாரிப்பாளர் செல்வகுமார் மற்றும் “டகால்டி” படத்தயாரிப்பாளர் சௌத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்