சென்சார் உறுப்பினர்களுக்கு செக்ஸ் கல்வி!
‘அடுத்த சாட்டை ‘படத்தில், “செக்ஸ் கல்வி அவசியம்” என வரும் காட்சிகளில் வார்த்தைகளை மியூட் செய்திருக்கிறது சென்சார் போர்டு.
“பாலியல் கல்வி” என்பது எப்படி உடலுறவு கொள்வது என்பதைப் பற்றியது அல்ல. உடல் அமைப்பு, மாற்றங்கள் குறித்து அறிவதுதான். இதை புரியாத சிலர் எதிர்க்கிறார்கள்.
ஆனால் இந்த புரிதல் சென்சார் போர்டு அதிகாரி மற்றும் உறுப்பினர்களுக்கே இல்லை.
பள்ளி, கல்லூரி விண்ணப்பங்களில் கூட பாலினத்தை குறிக்க sex என்று தானே இருக்கும்?
அதீத வன்முறை, ஆபாச காட்சிகள் கொண்ட பல படங்களை சென்சார் கண்டுகொள்வதில்லை. ஆனால் செக்ஸ் என்ற வார்த்தையே தவறு என்கிறார்கள்.
முதலில் சென்சார் போர்டு உறுப்பினர்களுக்கு செக்ஸ் கல்வி போதிக்க வேண்டும்.
– டி.வி.எஸ். சோமு