தென்னிந்தியத் திரைப்படத்துறையின் தணிக்கைத் துறை அதிகாரியாக செயல்பட்டு வருபவர் லீலா மீனாட்சி. இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஒரு திரைப்படம் தணிக்கைத் துறையினரால் தணிக்கை செய்யப்பட்ட பிறகு புதிதாக அதில் காட்சிகளை சேர்ப்பது எப்படி சட்டத்திற்குப் புறம்பானதோ, அதே போல் ஏற்கனவே இருக்கும் காட்சிகளை நீக்குவதும் சட்டத்திற்குப் புறம்பானது.
அப்படி தணிக்கை செய்யப்பட்டப் பின்னர் காட்சிகளை சேர்த்தாலோ அல்லது நீக்கினாலோ மீண்டும் தணிக்கைத் துறையிடம் சான்றிதழ் பெற்றப் பின்னரே திரைப்படத்தை வெளியிடமுடியும். அப்படி மறு தணிக்கை செய்யாமல் படத்தை வெளியிட்டால், சட்டரீதியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்..” என்று எச்சரித்துள்ளார். இந்த எச்சரிப்பு விரைவில் வெளியாகவிருக்கும் ஒரு முக்கிய நடிகரின் படத்தை மனதில் வைத்துத்தான் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அப்படத்தில் தணிக்கைக்குப் பின்னர் சில காட்சிகளை படத்திலிருந்து தயாரிப்பு தரப்பு நீக்கி இருப்பதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்தே இந்த எச்சரிக்கை நடவடிக்கை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்