சென்றவாரம் தோட்டா துளைத்தப் படங்கள் எவை?
சென்றவாரம் வருமா வராதா என எதிர்பார்ப்பை எகிற வைத்த படமான என்னை நோக்கிப்பாயும் தோட்டா முடிவில் வந்தே விட்டது. அதுகூட வந்த படங்களான மார்க்கெட் ராஜா, அடுத்தச்சாட்டை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை என்றே தெரிகிறது. அதே சமயம் இப்படங்களை கெளதம் வாசுதேவ் மேனனின் என்னை நோக்கிப் பாயும் தோட்டா பதம் பார்த்துவிட்டது என்றும் சொல்ல முடியாது. ஏன் என்றால் தோட்டாவும் ஒட்டுமொத்த ரசிகர்களை கவரவில்லை என்றே தெரிகிறது. ஏ சென்டர் ஆடியன்ஸை முழுதும் வசீகரித்த இப்படம் பி சி சென்டர் ஆடியன்ஸை பெரிதாக ஈர்க்கவில்லை என்றும் தெரிகிறது. கெளதமின் முந்தையப் படங்களின் சாயல் ஒருப்பதாக ரசிகர்கள் பீல் பண்ணுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஆக சென்றவாரம் சொல்லும் படியாக ஒருபடமும் செல்லுபடியாகவில்லை என்று இக்கட்டுரையை முடிக்கலாம்