Tamil Movie Ads News and Videos Portal

ஜி.வி.பிரகாஷ் கவுதம் மேனன் இணைந்து நடிக்கும் செல்ஃபி!

அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க, கதாநாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். இவர்களுடன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் வாகை சந்திரசேகர், அறிமுக நாயகன்DG குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் நம்பிக்கைக்குரிய தளபதியும், உதவி இயக்குனருமான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை எஸ்.இளையராஜா கவனிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டு இருக்கிறார். இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத் தளத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தை டிஜி பிலிம் கம்பெனி நிறுவனம் தயாரித்துள்ளது.