Tamil Movie Ads News and Videos Portal

செல்ஃபி படத்தை ஏன் பார்க்கணும்? நச்சுன்னு 4 ரீசன்!

GV&GVM நடிப்பில் வர்ற வெள்ளிக்கிழமை வெளியாகப்போகுது செல்ஃபி. கேட்சியான டைட்டிலோட இப்படத்தில் இயக்குநரா அறிமுகமாகிறார் மதிமாறன். இந்தப்படம் மீது யெங்க்ஸ்டர் துவங்கி பொலிட்டிஷியன்ஸ் வரைக்கும் ஏக எதிர்பார்ப்பு இருக்கு.அது ஏன்?

“காரணம் இருக்கு ராசா..படத்துல அப்படியான கன்டென்ட் இருக்கு மாஸா”

ரைட்டு! இதையும் தாண்டி இந்தப்படத்தை ஏன் பார்க்கணும் அப்படின்ற கேள்வி உங்ககிட்ட இருக்குதா? அப்படின்னா எங்ககிட்ட பதில் இருக்கு…

ரீசன்-1
வெற்றிமாறனின் வார்த்தை. வெற்றிமாறன் அவ்வளவு எளிதில் ஒரு படத்திற்கு பாஸ்மார்க் கொடுக்க மாட்டார். ஏன்னா அவர் படத்திற்கே அவர் முழுப்பிரச்சாரம் செய்ய தயங்குவார். அப்படியான வெற்றிமாறனே இப்படம் குறித்து ஆடியோ லாஞ்சில் சிலாகித்துப் பேசினார். முக்கியமா படத்தின் லாபம் பன்மடங்கு பெருகும்னு சொன்னாப்டி

ரீசன்-2
GV& GVM காம்போ

நீ ஒரு மாதிரின்னா…நான் புது மாதிரின்னு சொல்றாமாதிரி இந்தக் காம்போவே வேறமாதிரி இருக்குது. இரண்டுபேருமே வேறவேற டோன்ல நடிக்கிறவங்க.. இரண்டு பேரும் ஒண்ணா நடிச்சுருக்கதால நிச்சயமாக ஒரு சம்பவத்தை எதிர்பார்க்கலாம்

ரீசன்-3
அன்புமணி ராமதாஸ்:

பிக்பாஸ் வீட்டுக்கும் எலெக்‌ஷன் ரிசல்ட்டுக்கும் ஒரு சம்ப்ந்தமும் இல்லாத மாதிரி செல்ஃபி படத்திற்கும் அன்புமணி ராமதாஸுக்கும் என்ன சம்பந்தம்னு உங்களுக்கு கேள்வி எழலாம்..காரணம் இருக்கு பாஸ். அன்புமணி ராமதாஸ் தன் ட்விட்டர்ல செல்ஃபி படம் குறித்து சிலாகிச்சுருக்கார்

ரீசன்-4
வெற்றிமாறன் வழியில் மதிமாறன்.

தமிழ்சினிமாவில் மதிமாறன் புதிய அறிமுகமாக இருந்தாலும் இந்தப்படத்தின் கதையை மிக போல்டாக தேர்ந்தெடுத்துள்ளார். நீட் உள்ளிட்ட அரசியல் சம்பவங்களை கூட பக்கா கமர்சியலாக படத்தில் கோர்த்துள்ளார் என்கிறார்கள் படம் பார்த்த முக்கியஸ்தர்கள்.. ஆக இந்த நான்கு காரணங்களுக்காகவே செல்ஃபிக்கு செல்லலாம்னு ஸ்ட்ராங்கா சொல்றான் எமக்குள்ள இருக்குற சினிமா ரசிகன்..