நடிகர் விஜய் நடிக்க வந்த காலகட்டத்திலேயே பாடல் பாடுவதிலும் ஆர்வம் காட்டினார். ‘ஊட்டி மலை ப்யூட்டி ஒன் பேரு என்னமா..’ ‘கோயமுத்தூர் மாப்ளைக்கு பொண்ணு கெடச்சா” என அவர் பாடல் பாட அப்பாடலுக்கு கீழே, இந்தப் பாடலைப் பாடியவர் உங்கள் விஜய் என்ற டைட்டில் கார்டுகள் போடப்பட்டு அந்தக் காலத்திலேயே அவை பெரும் வரவேற்ப்பைப் பெற்றன. இன்றும் அவர் நடிக்கும் ஒரு சில படங்களில் அவர் பாடும் வழக்கம் இருந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திலும் அனிருத் இசையில் ஒரு பாடலைப் பாடவிருக்கிறார்.
பெரும்பாலும் தான் நடித்த படங்களின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஒரு குட்டிக்கதை சொல்வது வழக்கம். இப்பொழுது அவர் பாடப் போகும் பாடலும் “ஒரு குட்டிக்கதை சொல்றேன்” என்றே தொடங்கவிருக்கிறதாம். ஏற்கனவே விஜய் இசை வெளியீட்டு விழாவில் இதுவரை சொன்ன குட்டிக்கதை தொகுப்பை நீட்டாக எடிட் செய்து இப்பொழுதே விஜய் ரசிகர்கள் இணைய வெளியில் தெறிக்கவிட்டு வருகிறார்கள். பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவிருக்கிறது. இதற்கு முன் அனிருத் இசையில் பாடிய ‘செல்ஃபி புள்ள” பாடல் போல “குட்டிக் கதையும்” மாஸ் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.