புகழ்பெற்ற தலைப்பிற்கு புகழ் சேர்த்துள்ளதா படம்?
ஹீரோ சதிஷின் காரில் விழுந்து ஒருவர் இறந்துவிடுகிறார். அவர் உடலை கார் டிக்கியில் மறைக்கிறார் சதிஷ். மேலும் ஒரு பெண்ணின் மரணத்திலும் ஒரு வில்லங்கம் வருகிறது. இரு மரணத்திற்கான விசாரணை நடைபெறுகிறது. விசாரணை வளையத்திற்குள் சதிஷுக்கு நேரும் அனுபவங்களே படத்தின் கதையாக விரிகிறது
செய்த குற்றத்தை மறைக்கும் பாவனையில் சதிஷ் கொடுக்கும் ரியாக்சன்ஸ் தரமாக அமைந்துள்ளது. Overall நல்ல நடிப்பையே கொடுத்துள்ளார். சதிஷுக்கு அடுத்து பலமாக படத்தில் ஸ்கோர் செய்பவர் பாவேல் நவகீதன். ஈகோ போலீஸாக அவர் ஆடும் ஆட்டம் கன கச்சிதம். மைம் கோபி உள்ளிட்ட இதர நடிகர்கள் ஓகே ரகம்
திரில்லர் படத்திற்கான டெம்போவிலே இருக்கிறது இசை. ஒளிப்பதிவாளரும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். தரமான எடிட்டிங்கும் படத்திற்கு ப்ளஸ்
முதல் பதினைந்து நிமிடத்தில் நமக்குள் ஏற்படும் பரபரப்பு அப்படியே தொட்டுத் தொடர்கிறது. நல்ல நல்ல ட்விஸ்டுகளும் படத்தை ரசிக்க வைக்கின்றன. முன்பாதியின் அடர்த்தி பின்பாதியில் சறுக்கினாலும் ஓரளவு நல்ல படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது
சட்டம் என் கையில்- ரசிகனுக்கு ஏற்ற தீர்ப்பு
3/5
-மு.ஜெகன் கவிராஜ்