Tamil Movie Ads News and Videos Portal

49 முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் சசிக்குமாரின் “ராஜவம்சம்”

கிராமத்துக் கதைக்களன் சார்ந்த படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் சசிக்குமார், அடுத்து அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். ‘ராஜவம்சம்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் கிராமத்து மண்மணத்தோடு உருவாகியிருக்கிறது. இப்படத்தில் நிக்கி கல்ராணி சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். டி.டி.ராஜா தயாரித்துள்ளார். ராதாரவி, தம்பி இராமையா, விஜயகுமார் என தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான 49 நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். தனது முதல் படத்திலேயே இத்தனை முக்கிய நட்சத்திரங்களை திறமையாக கையாண்டிருக்கும் இயக்குநரைப் பார்க்கும் போது வியப்பாகவிருக்கிறது என்று தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநரும் நாயகனுமான சசிக்குமார்.