Tamil Movie Ads News and Videos Portal

“சசிகுமார் தங்கமான பிள்ளை”-ராதாரவி புகழாரம்

சமீபத்தில் நடைபெற்ற ராஜவம்சம் படத்தின் ஆடியோ லாஞ்சில் நடிகர் ராதாரவி பேசியதாவது.

“விழாவில் இருக்கும் அத்தனை பேருக்கும் என் வணக்கம். ராதாரவி பேசினால் சர்ச்சை என்கிறார்கள். என் பேச்சு புரியாதவர்களுக்குத் தான் சர்ச்சை. இந்தச் சகோதரர் கதிர்வேலு ரொம்பப் போராடி வந்திருக்கிறார். தயாரிப்பாளரை நான் இன்று தான் பார்க்கிறேன். சசிகுமார் தான் இந்தப்படத்தின் தயாரிப்பாளர். ரொம்ப தங்கமான பிள்ளை. இப்ப நிறைய நடிகர்கள் பாடிகாடோடு வருகிறார்கள். சசிகுமார் ரொம்ப எளிமையாக இருக்கிறார். கேமராமேன் எங்களை போகஸ் பண்ணவே இல்லை. கேமராவுக்கு முன் யார் வருகிறார்களோ அவர்களை எடுத்துக் கொண்டார். இந்தக் கூட்டத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன். ஆனால் சந்தோஷமாக நடித்தேன்.

சசிகுமாருக்கு இது செகண்ட் லைப் என்றார்கள். அவருக்கு இப்போது இருப்பதே நயிஷ் லைப் தான். நிக்கி கல்ராணி நல்லா நடிச்சிருக்கு. அவருக்கு எல்லாக் கேரக்டருக்கும் பொருத்தமான நடிகை. அவருக்கு எல்லா மொழியும் தெரியும் என்றார்கள். அது நல்ல விசயம். நானும் இந்தி கற்றிருந்தால் இன்னைக்கு அங்கே எனக்குப் பெரிய இடம் கிடைத்திருக்கும். இந்தப்படத்தை குடும்பத்தோடு வந்து பாருங்கள்” என்றார்.

சசிகுமார், நிக்கிகல்ராணி, விஜயகுமார், ராதாரவி உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள இப்படத்தை கதிர்வேலு என்ற புதுமுக இயக்குநர் இயக்கி இருக்கிறார். செந்தூர் பிலிம் இண்டெர்நேஷனல் சார்பாக டி.டி ராஜா தயாரித்துள்ளார்