Tamil Movie Ads News and Videos Portal

”சினிமாவிற்கு லாயக்கு இல்லாதவர் சசிக்குமார்” – ராதாரவி

எப்போதுமே சினிமா சார்ந்த நிகழ்வுகளில் நடிகர் ராதாரவி பேசுவது ஏதாவது ஒரு வகையில் சர்ச்சையை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கத்தில் சசிக்குமார், நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்திருக்கும் “ராஜ வம்சம்” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி நடிகரும் இயக்குநருமான சசிக்குமாரை சினிமாவிற்கு லாயக்கில்லாதவர் என்று பேசியிருக்கிறார்.

 

அவர் பேசும் போது, “சசிக்குமார் சினிமாவில் தான் வீரதீரமிக்க மனிதராக நடிக்கிறார். ஆனால் நிஜத்தில் மிகவும் தங்கமான பிள்ளை. ஆனால் அவர் சினிமாவிற்கு லாயக்கில்லாதவர். ஏனென்றால் அவரிடம் துளியும் பந்தா இல்லை. இன்று ஒரு படத்தில் நடிக்கும் நடிகர்கள் கூட பாடிகார்டு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இவர் அந்த மாதிரியெல்லாம் செய்வது இல்லை. “ என்று பேசியுள்ளார். சசிக்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் சசிக்குமார், நிக்கி கல்ராணி, தம்பி ராமையா, ராதாரவி என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது” என்பது குறிப்பிடத்தக்கது.