Tamil Movie Ads News and Videos Portal

‘சர்தார்’வில்லன் காட்சிக்காக மட்டும் ரூபாய் 4 கோடி செலவு !

எஸ். லக்ஷ்மன் குமார் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் ‘ சர்தார்’. கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்டுவரும் படம். சமீபத்தில் இதன் படபிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடந்தது. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளுக்காக மட்டுமே அசர்பைசான் சென்று படமாக்கினார்கள்.

இது வரை ஷூட்டிங் எடுக்கப்படாத அசர்பைசான் பாராளுமன்றத்திலேயே ஷூட்டிங் நடத்தப்பட்டது. பாராளுமன்றம் நடைபெறுவது போலவும், அதில் வில்லன் சங்கி பாண்டே சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. மற்றும் பல இடங்களில் படமானது. இதையடுத்து ஜார்ஜியாவிலும் படமாக்கப்பட்டது. இந்த இரு இடங்களில் நடைபெற்ற காட்சிகளுக்காக மட்டுமே ரூபாய் 4 கோடி செலவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.