தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடிகள் வெகு சிலரே. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் ராதிகாவும் சரத்குமாரும். இருவரும் இதற்கு முன்பே பல வெற்றி பெற்ற திரைப்படங்களில் சேர்ந்து நடித்து இருந்தாலும் கூட, இருவரும் இணைந்து வாழத் தொடங்கியப் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சேர்ந்து நடிக்கும் முதல் படம் “வானம் கொட்டட்டும்” தான்.
இதில் நடிப்பது குறித்துப் பேசிய சரத்குமார், “மண் மணம் கமழும் கதை. குடும்ப உறவுகள் வெற்றி தோல்விகளை எப்படிப் பார்க்கிறார்கள். எப்படி அணுகுகிறார்கள் என்பதை ரத்தமும் சதையுமாக பேசியிருக்கும் படம் என்பதால், கதை கேட்டதும், நானும் ராதிகாவும் படத்தில் நடிக்க சம்மதித்துவிட்டோம். ராதிகாவிடம் பிடிக்காத விசயம் என்றால், அது அவரின் கோபம் மட்டும் தான். அவரின் மற்ற எல்லா குணங்களும் மிகவும் பிடிக்கும். அவர் தனது கோபத்தை கட்டுப்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் என்பது தான் அவரிடம் நான் வைக்கும் வேண்டுகோள்.” என்று தெரிவித்துள்ளார்.