Tamil Movie Ads News and Videos Portal

சந்தானமா..? சமுத்திரக்கனியா..??

ஜனவரி 31ல் வெளியாகவிருக்கும் சந்தானத்தின் டகால்டி, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களோடு, சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் “நாடோடிகள் 2” திரைப்படமும் களம் காணவிருக்கிறது. 2007ம் ஆண்டு “நாடோடிகள்” படத்தின் மூலம் மீண்டும் படம் இயக்கத் துவங்கிய சமுத்திரக்கனி, அதைத் தொடர்ந்து சில படங்களை இயக்கினார். ஆனால் அப்படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை.

இதனையடுத்து ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகத்தினைத் தொடங்கினார். இதில் சமுத்திரக்கனி, பரணி, நமோ நாராயணன் ஆகியோரோடு அதுல்யா ரவி, அஞ்சலி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த மூன்று படங்கள் ஒரே நாளில் வெளியாகும்பட்சத்தில் எந்தப் படத்திற்கு ஆடியன்ஸிடம் ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ‘டகால்டி’ படத்திற்கு முன்னுரிமை கொடுத்து வரும் சந்தானம் ‘சர்வர் சுந்தரம்’ படத்தைக் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. நாடோடிகள் ஏற்கனவே வெற்றிபெற்ற திரைப்படம் என்பதால் அதற்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.