’உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ ஆகியப் படங்களை இயக்கிய இயக்குநர் சாமி தற்போது உலக சினிமா ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்ட திரைப்படமான ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ திரைப்படத்தினை முறைப்படி அனுமதி பெற்று தமிழில் ரீமேக் செய்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கொடைக்கானல் அருகில் உள்ள பூம்பாறை மலைக்கிராமத்தில் வைத்து நடந்து முடிந்துள்ளது. இப்படம் குறித்துப் பேசிய இயக்குநர் சாமி, “இதற்கு முன்னர் நான் இயக்கிய படங்கள் என்னுடைய அடையாளம் இல்லை. உலகில் எந்த மூலையில் உள்ள குழந்தைகளாலும் புரிந்து கொண்டு கொண்டாடப்படும் திரைப்படமான சில்ரன் ஆஃப் ஹெவன் திரைப்படத்தினை என் அக்காவின் குழந்தைகளும் ஏதேச்சையாக பார்க்க நேர்ந்தது. அதன் விளைவாக இது போன்ற திரைப்படங்கள் ஏன் தமிழில் வரவில்லை என்று கேள்வி எழுந்தது. அதற்கு பதிலாக நானே இப்படத்தினை அனுமதி பெற்று ரீமேக் செய்திருக்கிறான்” என்று கூறியுள்ளார்.