Tamil Movie Ads News and Videos Portal

சமந்தாவின் ஜோடி பிரசாந்த்-ஆ..!?

நடிகை சமந்தாவிற்கு இது போதாத காலம் போலிருக்கிறது. சமீபத்தில் ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘ஜானு’ படம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தெலுங்கு ரசிகர்கள் அவரை “ப்ளாஃப் ஹீரோயின்” என்று கிண்டல் செய்யத் தொடங்கினர். இது தொடர்பாக தனது குமுறல்களை சமீபத்தில் தான் வெளிப்படுத்தி இருந்தார். வேறு புதிய படங்கள் ஏதும் அவருக்கு புக் ஆகாமல் இருந்து வந்த நிலையில், தற்போது வுமன் செண்ட்ரிக் வகைப்படமாக உருவாகவுள்ள புதிய படத்தில் சமந்தாவின் ஜோடியாக பிரசாந்த் நடிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி ஹீரோயினாக வலம் வந்த சமந்தா புதிய பட வாய்ப்புகள் இல்லாததால் பிரசாந்த்-வுடன் இணைய சம்மதித்தாரா..? இல்லை வுமன் செண்ட்ரிக் வகைப்படம் என்பதால், பெரிய ஹீரோக்கள் தவிர்க்கப்பட்டு படக்குழுவினரால் பிரசாந்த் தேர்வு செய்யப்பட்டாரா..? என்று சமந்தாவின் அதிதீவிர ரசிகர்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தினை “மாயா”, “கேம் ஓவர்” ஆகிய வுமன் செண்ட்ரிக் படங்களை ஏற்கனவே இயக்கிய அனுபவசாலியான இயக்குநர் “அஸ்வின் சரவணன்” இயக்கவிருப்பதால் இப்படம் சமந்தா விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க உதவும் என்ற நம்பிக்கையுடனும் சில ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். கடவுள் சமந்தாவை கை தூக்கி விடட்டும்.