Tamil Movie Ads News and Videos Portal

சமந்தா சாய்பல்லவியை பாராட்டினாரா? குறை கூறினாரா?


‘பிரேமம்’ மலையாளப்படத்தின் மூலம் மலர் டீச்சராக அறிமுகமாகி இன்று தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முக்கியமான நாயகியாக வளர்ந்திருப்பவர் சாய்பல்லவி. தமிழில் இவர் நடித்த கரு, மாரி 2, என்.ஜி.கே போன்ற படங்கள் சிறப்பாக ஓடவில்லை. ஆனால் மாரி 2 படத்தில் இவர் தனுஷுடன் ஆடிய ஆட்டம் யூ-டியூப்பில் உலகளவில் பேசப்பட்டது.

தற்போது இவர் நடிகை சமந்தாவின் கணவரான நாகசைதன்யாவுடன் ஒரு படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். சேகர் கம்முலா இயக்கும் இப்படத்திற்கு “லவ் ஸ்டோரி” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 சதவீத அளவிற்கு மீதம் இருக்கிறது. படம் எடிட் செய்யப்பட்டவரை படத்தைப் பார்த்த நாயகி சமந்தா, படத்தில் சாய்பல்லவி தான் டாமினேட் செய்து இருப்பதாக கூறி இருக்கிறார். இதைப் பாராட்டாக கூறினாரா..? இல்லை குறையாக கூறினாரா..? என்று தெரியாமல் முழிக்கிறாராம் இயக்குநர்.