சமூக வலைதளப்பக்கங்களான டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் தான் தற்போது எல்லா நடிகர் நடிகைகளும் தங்களது பொழுதை கழித்து வருகிறார்கள். ஆனால் விதிவிலக்காக இதில் எப்பொழுதுமே ஆக்டிவா இருக்கும் சமந்தா கொரோனா தாக்கம் அதிகரித்ததில் இருந்து சமூக வலைதளப் பக்கமே வரவில்லை. இதனை முன்னிட்டு, அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், இதனால் அவரின் கணவருடன் பொழுதைப் போக்கி வருவதாகவும் பல செய்திகள் வெளியானது.
இதற்கு எந்தவித மறுப்பும் அவர் தரப்பில் தெரிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது சமூக வலைதளத்திற்கு மறுபிரவேசம் செய்திருக்கும் சமந்தா, தனது பூனைக்குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருப்பதோடு, “நீண்ட தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டேன்” என்று டிவிட் செய்திருக்கிறார்.