Tamil Movie Ads News and Videos Portal

”சலார்” படத்தில் ராஜமன்னார் கதாபாத்திரத்தில் மிரட்டும் ஜெகபதி பாபு!

ஹோம்பாலே பிலிம்ஸ் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கும் ‘சலார்’ படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் ஜெகபதி பாபு ஏற்றிருக்கும் ராஜமன்னார் என்ற கதாபாத்திரத்தின் போஸ்டரை அப்பட நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.’கே ஜி எஃப் சாப்டர் ஒன்’ மற்றும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ ஆகிய படங்களின்  தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் ‘சலார்’. நடிகர் பிரபாஸ், நடிகை சுருதிஹாசன் நடிப்பில் மாஸான ஆக்சன் அட்வென்ச்சர் திரைப்படமாக ‘சலார்’ உருவாகிறது. இன்று ‘சலார்’ படக்குழுவினர், புதிய அப்டேட்டை வெளியிட்டனர். இதில் தெலுங்கின் முன்னணி நடிகரான ஜெகபதிபாபு ‘ராஜமன்னார்’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரின் மிரட்டலான லுக், போஸ்டராக வெளியிடப்பட்டிருக்கிறது.

‘சலார்’ படத்தில் இடம்பெறும் ராஜமன்னார் கதாபாத்திரம், கதையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனை போஸ்டர் மூலம் வெளிப்படுத்துவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அத்துடன் இந்த கேரக்டர் லுக் போஸ்டர், ‘சலார்’ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தும்.
‘கே ஜி எஃப்’ படத்தின் முதல் இரண்டு பாகங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் படத்தின் இயக்குனர் பிரசாத் நீல் மற்றும் பட நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ், இப்படத்தின் 20 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பதாகவும், மீதமுள்ள படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும்’என்றும் அறிவித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு, இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

ராஜமன்னாரின் போஸ்டர் குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பேசுகையில்,’ சலார் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இன்று வெளியிடப்பட்டிருக்கும் ‘சலார்’ படத்தின் புதிய போஸ்டரில், நடிகர் ஜெகபதிபாபு ஏற்றிருக்கும் ராஜமன்னார் என்ற கதாபாத்திரத்தின் தோற்றம் மிரட்டலாக அமைந்திருக்கிறது. இது ரசிகர்களுக்கு ராஜமன்னார் கதாபாத்திரம் குறித்த கற்பனை கலந்த எதிர்பார்ப்பை உருவாக்கும். இப்படத்தின் திரைக்கதையில் பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் இந்த கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை போஸ்டராக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.’ என்றார்.இது தொடர்பாக இயக்குனர் பிரசாந்த் நீல் பேசுகையில்,’ சலார் படத்தில் இடம்பெற்றுள்ள மேலும் சில கதாபாத்திரங்களை பற்றிய லுக், படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் தருணங்களில் வெளியிடப்படும்.’ என்றார்.