Tamil Movie Ads News and Videos Portal

விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘சைந்தவ்’!

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் தயாராகும் ‘ வெங்கி 75’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்தப் படத்திற்கு ‘சைந்தவ்’ என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான காணொளியும், படத்திற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘ஹிட்’ பர்ஸ்ட் கேஸ் மற்றும் ‘ஹிட்’ செகண்ட் கேஸ் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

விக்டரி வெங்கடேஷ் – சைலேஷ் கொலனு- நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் ‘சைந்தவ்’ படத்தின் பிரத்யேக காணொளியில், நாயகன் விக்டரி வெங்கடேஷ் தாடியுடன் கையில் துப்பாக்கி ஏந்தியபடி தோன்றுவதும், பின்னணியில் கார் வெடித்து சிதறுவதும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. ‘சைந்தவ் ‘ படத்தின் டைட்டில் போஸ்டர், விக்டரி வெங்கடேஷ் அதிரடியாக நடிப்பதாகவும், தீவிரமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் குறிப்பிடுகிறது.