Tamil Movie Ads News and Videos Portal

சாமானியன்- விமர்சனம்

ஒரு சாமானியன் சமூகத்திற்கு பாடம் எடுக்கிறார்

கிராமத்தில் இருந்து தன் நண்பர் எம்.எஸ் பாஸ்கரோடு வரும் ஹீரோ ராமராஜன் சென்னையில் தன் இஸ்லாமிய நண்பர் ராதாரவி வீட்டில் தங்குகிறார். பின் ஒரு வங்கிக்கு வெடிகுண்டுகளோடு செல்கிறார். அந்த வங்கியை தன் கையில் எடுக்கிறார். அதற்கான காரணம் தான் படத்தின் மீதிக்கதையாக விரிகிறது

ஒரு காலத்தில் ஸ்கிரீனில் வந்தாலே மக்கள் கூட்டம் ஆரவாரிக்கும் அளவிற்கு கமர்சியல் ஹீரோவாக இருந்தவர் ராமராஜன். இப்படத்தில் அவரின் உடல் நலிவு தெரிகிறது. அதைப்பொருட்படுத்தாத நல்ல நடிப்பை வழங்க ராமராஜன் முயற்சித்துள்ளார். ராதாரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் தங்கள் அனுபவ நடிப்பால் அசத்தியுள்ளனர்.

இளையராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு துளியும் உதவவில்லை. ஒரு காலத்தில் இளையராஜா இசையாலே ஹிட்டுகளை கொடுத்தவர் ராமராஜன். ஒளிப்பதிவு ஓகே ரகமாக அமைந்துள்ளது

பேங்க் சம்பந்தப்பட்ட படங்கள் சினிமாவில் நிறைய வந்துவிட்டன. அதனால் இந்தப்படத்தில் சில வித்தியாசமான முயற்சியைச் செய்திருக்கலாம். வழக்கமான ட்ராமாவும் அறிவுரையும் நமக்கு புது அனுபவத்தை தரவில்லை. சிலபல அட்வைஸ்கள் மட்டும் ஒகே. படமாக தவறி பாடமாக தேறியிருக்கிறார் இந்த சாமானியன்
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்