நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ சந்திரசேகர் நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். நடிகர் சங்கம் செயல்படவே இல்லை என்பது அவரது குற்றச்சாட்டு..மேலும்
காஞ்சிபுரம் – விஜய் மன்ற அலுவலக திறப்பு விழாவுக்கு வந்த *திரைப்பட இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அளித்த பேட்டியின் விபரம் வருமாறு,
அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை – மக்களிடம் அதிக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருவதால் அரசியலை வியாபாரமாக செய்யாதீர்கள், அரசியல்வாதிகள் பணம் மற்றும் இலவச பொருட்கள் கொடுத்தால் ஜெயித்து விடலாம் என்ற எண்ணம் மாறிக் கொண்டே வருகின்றது. அதனால் மக்களிடம் அரசியல்வாதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் வெற்றியடைய முடியும்.
நாட்டைக் காக்க நல்லவர்கள் ஒன்று சேரவேண்டும். டிராபிக் ராமசாமி ஐஏஎஸ் சகாயம் போன்ற சமூக ஆர்வலர்கள் உடன் விஜய் இணைய சாத்தியமில்லை
குடி உரிமை சட்ட திருத்த மசோதா மிகவும் குழப்பமாக உள்ளது .அதை புரிந்து கொள்ள முடியவில்லை.அதை பற்றி கருத்து கூற இயலவில்லை.
கடந்த நான்கு ஐந்து வருடமாக திரைப்படத்துறை அழிவை நோக்கி மிக மோசமாக சென்று கொண்டுள்ளது.தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் சரியாக செயல்படுகின்றனவா என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது . அரசு அதிகாரிகள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் முதல் கொண்டு நடிகர்கள் சங்கம் வரை அனைத்திலும் தலையிடுவதாக திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எஸ் ஏ சந்திரசேகர் குற்றசாட்டு