Tamil Movie Ads News and Videos Portal

” ருத்ர தாண்டவம் ” படத்திற்கு U / A சான்றிதழ் !

G.M.Film Corporation பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் ” ருத்ர தாண்டவம்” மோகன் G இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார்.சின்னத் திரை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.திரௌபதி படத்தை வெளியிட்ட 7 G ஃபிலிம்ஸ் சிவாஇந்த படத்தையும் உலக முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார்.இந்த படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ஒரு சில கட்டுகளுடன் படத்திற்கு U / A சான்றிதழ் வழங்கியுள்ளனர். விரைவில் படத்தின் டிரெய்லர் வெளியாக இருக்கிறது.